நமது டிஜிட்டல் எதிர்காலம் – திட்டத்தின் முகப்புப் பக்கம்

முன்னோட்டம்

பொது நன்மைக்காக, இந்த டிஜிட்டல் மாற்றத்தினை வழிநடத்தத் தொழிற்சங்கங்கள் தயாராக இருந்தால், தொழிலாளர்களின் ஆற்றலை வளர்ப்பதற்கும், பொதுப் பணிகளை மேம்படுத்தவும், நமது தரவுகளின் மீது ஒரு ஜனநாயக ரீதியான கட்டுப்பாட்டினைக் கொண்டுவரவும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.

ஆனால், இதைச் செய்வதற்கு - ஜனநாயக கட்டுப்பாட்டினை விலையாகக் கொடுத்து, குறிப்பாகத் தனியாருக்கு உதவும் நோக்கில்  இந்த டிஜிட்டல் மாற்றம் எப்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை  நாம் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், உறுதியான மாற்றுவழிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் அதிகாரத்தைத் திறம்பட எதிர்கொள்ளவும் நாம் தயாராக இருத்தல் வேண்டும்.

இந்த டிஜிட்டல் மாற்றமானது பொதுத்துறையால் நிர்வகிக்கப்பட வேண்டும் மற்றும் அனைவரின் நன்மைக்கும் உகந்தவகையில் இருத்தல் வேண்டும்’ – என்கிற ஒரு நேர்மறையான, மாற்று மாதிரி திட்டத்தினையும், இலக்கினையும் நாம் கட்டாயமாக உருவாக்கி, அதனைப் புரியும்படி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

நமது இலக்கானது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான அதிகாரத்தினை வளர்ப்பதற்கு, கீழ்வரும் திறன்கள் நமக்கு அவசியம்:

  • பெற வேண்டும் : பணியிடத்தில் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அதிகாரம் ஆகியவற்றைப் பெற்று டிஜிட்டல் மயமாக்கல் சார்ந்த செயல்பாடுகளை முன்னறிவுடன்  மேற்கொள்ளவேண்டும்

  • தாக்கத்தினை ஏற்படுத்தவும்:  பொதுத்துறை சேவைகள் டிஜிட்டல் மயமாகும் போது, அவை சிறப்பாக அணுகத் தகுந்ததாகவும், தரமானதாகவும், திறனுள்ளதாகவும் (நல்ல விதத்தில் இருத்தல் வேண்டும், செலவு குறைப்பாக மட்டும் இருத்தல் கூடாது) இருப்பதை உறுதி செய்யும் வகையில் கொள்கைகள் மற்றும் செயல்முறையில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும்

  • முன்னின்று வழிநடத்தவும்: டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும், நிர்வகிக்கப்பட வேண்டுமென்றும், நிர்வாக அமைப்புகளை உருவாக்குவதில் அவற்றின் முக்கியப்பங்கு என்னவென்பது குறித்தும் பொது விவாதங்களை முன்னின்று நடத்துங்கள்

  • கருவிகளை அறிந்துகொள்க: டிஜிட்டல் முறைமைகளை நிர்வகிக்க எந்தெந்த கருவிகள் உதவியாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளவும்

இந்த பி.எஸ்.ஐ. டிஜிட்டல் மயமாக்கல் திட்டமானது, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பொது சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச்செய்யவும் தேவையான சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்படுத்தக்கூடிய பரிந்துரைகள் ஆகியவற்றை வழங்கும்.

திட்ட ஆவணங்கள்

பகுதி வாரியாக திட்ட ஆவணங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு உரிய ஆவணங்களை அணுகுவதற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள உங்கள் பகுதியின் துணை பக்கத்தை கிளிக் செய்யவும் / சொடுக்கவும்.

வட அமெரிக்கா

ஐரோப்பா

கரீபியன்

ஆசியா பசிபிக்

லத்தீன் அமெரிக்கா

ஆப்ரிக்கா/மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்க நாடுகள்

எதற்காக இந்த திட்டம்?


நிதிநிலை அழுத்தம் மற்றும் அந்நிய முதலீடுகளுக்கான தேடல் ஆகியவற்றின் காரணமாக உலகெங்கிலும் உள்ள அரசுகள், சில காலமாக பொதுப் பணிகளை வழங்குவதற்கு டிஜிட்டல் தீர்வுகளை நாடி வருகின்றன.

மோசமான தாக்கங்கள் இருப்பினும், பல அரசுகள் குறைவான மேற்பார்வை அல்லது குறைவான பொறுப்புணர்வுடன் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

கோவிட் பெருந்தொற்று இந்த போக்கினை மேலும் வேகமாக்கி தொழிலாளர்களுக்கு பல்வேறு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தொடர் கண்காணிப்பு மற்றும் தொலைதூரத்திலிருந்து பணிபுரியும் புதிய முறைகளும் அதிகரித்துள்ளன.

உலகின் அனைத்துப் பகுதிகளிலும், முனைப்புடன் கூடிய குறிப்பிட்ட ஒரு உத்தியின் மூலமாகவே தொழிலாளர்களுக்கு ஏற்படும் தாக்கங்களை கையாள முடியும்.

அப்பணியின் பல்வேறு படிநிலைகளை இத்திட்டமானது ஒருங்கே கொண்டுவருகிறது. மேலும், நமது துணை அமைப்புகளோடு சேர்ந்து டிஜிட்டல் திறனை வளர்க்கும் முயற்சிக்கு இத்திட்டமே மையமாகும்.


விளக்கமான கண்ணோட்டம்

பெருந்தொற்றின் காரணமாக பொதுத்துறை அதிகார அமைப்புகள் மற்றும் முகமைகள் விரைவாக ஒருங்கிணைந்து புதிய டிஜிட்டல் முறைமைகளை நடைமுறைப்படுத்தும் சூழலில், (தொடர்பு எண்களின் பெயரைக் கண்டறியும் செயலிகள் பற்றி தற்போது பலருக்கும் தெரியும்) இந்த டிஜிட்டல் மயத்திற்கு மாறுவது புதிதான ஒன்றல்ல. இம்மாற்றமானது மேலும் விரிவடைந்து வருகிறது, குறிப்பாக முக்கியமான பொதுப் பணிகளான மருத்துவம், பொதுத்துறை நிர்வாகம், உட்கட்டமைப்பு, நீதித்துறை மற்றும் கல்வி என அனைத்திலும் இந்த மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

முரண்பாடுகளால் உந்தப்படும் உலக உலகளாவிய வளர்ச்சியை நாம் எதிர்கொண்டு வருகின்றோம், இருப்பினும் பொதுத்துறை பணிகளை (மேலும்) டிஜிட்டல் மயமாக்குவது குறித்த நிபந்தனைகள் பற்றி அரசியல் ரீதியாகவோ, தொழில்துறை ரீதியாகவோ கேள்விகள் எழுப்புவது குறைவாகவே நடக்கிறது. கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் பொதுத்துறைகளின் நிதிநிலை மீது பல ஆண்டுகளுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது; இதனால் டிஜிட்டல் முறைகளுக்கு மாறுவது மேலும் தீவிரமாகவுள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதாரங்கள் சரிந்துள்ள நிலையிலும் - ஆப்பிள், அமேசான், ஆல்பபெட், மைக்ரோசாஃப்ட், மற்றும் ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2020-ஆம் ஆண்டில் மட்டும் முதல் ஏழு மாதங்களில் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளன.

பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தினை இது அதிகரித்துள்ளதால், அவர்கள் தங்களது சொந்த டிஜிட்டல் மயமாக்கல் முறைகளை ஊக்குவித்து வருகின்றன.

தொழில்துறையில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கம் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது

2020-ல் முதல் ஏழு இடங்களில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் $3.4 ட்ரில்லியன் அளவிற்கு தங்கள் மதிப்பை உயர்த்தியுள்ளன.

இதற்கிடையில், நிதிப்பற்றாக்குறையால் தவிக்கும் பொதுத்துறை நிதிநிலைகளுக்கு வரிகள் மூலம் நியாயமாக வழங்க வேண்டிய பங்கினை தவிர்க்கும் நோக்கில் - பெருந்தொற்று சூழலின் மூலம் லாபம் ஈட்டும் பெருநிறுவனங்கள் வரிவிலக்களிக்கும் வெளிநாட்டுப் புகலிடங்களை நாடுவது மற்றும் நிதிநுட்ப வழிகளை கையாள்வது போன்ற முறைகளை வழக்கமாகப் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாகவே, உலகளவில் சிறப்பான மற்றும் தரமான பொதுச் சேவைகளை வழங்கும் பொருட்டு, பி.எஸ்.ஐ. அமைப்பு வரிவிதிப்பு முறைகளில் ஒரு முழுமையான மாற்றம் தேவை என்று போராடி வருகிறது. ஆனால், நாம் இம்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதேவேளையில் - பெரிய டிஜிட்டல் நிறுவனங்கள், வணிக ஆர்வலர்கள், ஊடகங்கள் மற்றும் பல அரசாங்கங்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு விரைவாக மாறுவதன் மூலம் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கலை விரைவுபடுத்துவதாகத் தெரிகிறது. பயன்பாட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை விலையாகக் கொடுத்தே இத்தகைய செயல்கள் அடிக்கடி அரங்கேறுவதாக தற்போதைய அனுபவங்கள் நமக்குக் காட்டுகின்றன.

சமூக அளவில், குறிப்பாகத் தொழிலாளர்களின் உலகில் நிலைக்கும் இந்த கட்டுப்பாடற்ற டிஜிட்டல் மாற்றத்திற்கு, குடிமக்களின் கூட்டமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிடமிருந்து வலுவான மற்றும் ஒருமனதான கோரிக்கைகள் அவசியமாக முன்வைக்கப்பட வேண்டும்.


தரவுகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் ‘டேட்டாஃபிகேஷன்’ எப்படி வேறுபடுகிறது?

ஒரு நாட்டின் ‘அனைத்து தரவுகளை டிஜிட்டல் மயமாக்குவது’ என்பது, சமூக சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளைப் பகிர்ந்த ஒன்றாகக் காண்பதிலிருந்து – அது தனிப்பட்ட ஒருவரின் ‘ஆபத்து’ என்று அறிவுறுத்தும் போக்கிற்கு மாறுவதாகும். உலகெங்கிலும், டிஜிட்டல் மயத்திற்குத் தயாராக போதிய நிறுவனங்களும், அரசமைப்புகளும் இல்லை; பொதுத்துறை சேவைகள் துஷ்பிரயோகம் செய்யவும், துஷ்பிரயோகம் செய்யப்படவும் கூடிய வாய்ப்புகள் உள்ள காரணத்தினால் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் குற்றச் செயல்கள் அதிகரிக்கவும், மனித உரிமைகள் மீறப்படவும் கூடும்.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் நிர்வாகம்; அவற்றின் திட்டமிடப்படாத மற்றும் திட்டமிட்ட நோக்கத்தினை சுற்றியுள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு; மற்றும் அதன் கட்டமைப்பு ஆகியவற்றை உடனடியாக கவனிக்க வேண்டும். உலகின் வளர்ச்சியற்ற நாடுகளில் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பொதுத்துறை சேவைகளை முன்வைப்பதால், டிஜிட்டல் காலனித்துவத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு அவசரத் தேவை உள்ளது.

புதிய தொழில்நுட்பங்களின் பிடியில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சிக்கித்தவிப்பது முதல் முறையாக நடக்கவில்லை. இருப்பினும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் திறன் மிக்கவர்கள் மற்றும் அதற்கு மாறுபவர்கள் ஒருபக்கம் இருக்க, மறுபுறம் இருக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய இருதரப்பினருக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதன் மையமாக மாற்றம் எதிர்பாராத வேகத்தில் வந்தாலும், அல்காரிதம் அடிப்படையில் முடிவெடுப்பதை அறிமுகம் செய்வது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இதனால் உற்பத்தி செயல்முறையிலிருந்து தொழிலாளர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பது நீக்கப்பட்டு, தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் முறைகள் அமல்படுத்தப்படும்.

டிஜிட்டல் மயமாக்கல் : பொதுத்துறை சேவைகள், தொழில் மற்றும் தொழிலாளர்களுக்கான ஒரு தொழிற்சங்க செயல்பாட்டு வழிகாட்டி

பொதுப் பணிகளில் உள்ள தொழிற்சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன, அதற்கு நாம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் யாவை மற்றும் அதற்கான ஆதாரங்கள் என்னென்ன உள்ளன?

பிரசுரத்தைத் படிக்கவும்

வெற்றி பெறுவதற்கான திறன் வளர்த்தல்


டிஜிட்டல் மயமாக்கலை ஒரு பயனுள்ள கருவியாக மாற்றுவதன் மூலம், தொழிலாளர்களின் நிலைமைகள் மற்றும் பொதுத்துறை பணிகளின் செயல்திறன், தரம் மற்றும் அணுகலை அதிகரிக்க முடியும். இதற்குத் தொழிற்சங்கங்களுக்கு டிஜிட்டல் அமைப்புகளின் மையமான தரவுகள் மற்றும் அல்காரிதம் பற்றி நல்ல புரிதல் இருத்தல் அவசியமாகும். இவை இரண்டும் பிரதானமானவையாகும்; பெரும்பாலான நேரங்களில் தொழிலாளர்களின் உரிமைகள், பணிகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.

தொழிற்சங்கங்களுக்குத் தெரியவேண்டியவை:

  • பணியிடத்தில் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அதிகாரம் ஆகியவற்றைப் பெற்று டிஜிட்டல் மயமாக்கல் சார்ந்த செயல்பாடுகளை முன்னறிவுடன் மேற்கொள்வது எப்படி?

  • பொதுத்துறை சேவைகள் டிஜிட்டல் மயமாகும் போது, அவை சிறப்பாக அணுகத் தகுந்ததாகவும், தரமானதாகவும், திறனுள்ளதாகவும் (நல்ல விதத்தில் இருத்தல் வேண்டும், செலவு குறைப்பாக மட்டும் இருத்தல் கூடாது) இருப்பதை உறுதி செய்யும் வகையில் - கொள்கைகள் மற்றும் செயல்முறையில் ஒரு தாக்கத்தினை எவ்வாறு ஏற்படுத்துவது?

  • டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும், நிர்வகிக்கப்பட வேண்டுமென்றும், நிர்வாக அமைப்புகளை உருவாக்குவதில் அவற்றின் முக்கியப்பங்கு என்ன என்பது குறித்தும் பொது விவாதங்களை எப்படி முன்னின்று நடத்துவது?.

  • டிஜிட்டல் முறைமைகளை நிர்வகிக்க எந்தெந்த கருவிகள் உதவியாக இருக்கும்?

கருப்பொருள்கள்


பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு பிராந்தியத்தின் பிரத்தியேக தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும், ஆனால் அனைத்தும் பின்வரும் முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியதாகவே இருக்கும்:

  1. தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை யாவை?

  2. பொதுத்துறை சேவைகள் மற்றும் வேலைகளை டிஜிட்டல் மயமாக்கல் எப்படி மாற்றிவருகிறது?

  3. தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, அவற்றில் என்ன மேம்பாடு / மாற்றம் தேவை என்பதில் தொழிலாளர்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன?

  4. ஒருதலைபட்சம், பாகுபாடுகள் மற்றும் மறைமுகமான முடிவுகளை எடுப்பதைத் தடுக்க தொழிற்சங்கங்கள், அல்காரித அமைப்புகளை நிர்வகிக்கும் குழுவில் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கண்டிப்பாகக் கோரவேண்டும். இதற்கான மாதிரி வடிவம் எப்படி இருக்க வேண்டும்? என்னென்ன நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும்?

  5. நமது டிஜிட்டல் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் கூட்டுப் பேரம் பேசுவதை நாம் எப்படிப் பயன்படுத்துவது?

  6. பிராந்தியத்தின் உள்ளேயும், மற்ற இடங்களிலும் போலிகளைத் தவிர்க்கவும், சிறந்த/மோசமான நடைமுறைகளைப் பகிர்வதற்கு உதவவும், பரஸ்பரம் உதவியாக இருந்து நிலையான மற்றும் வலுவான டிஜிட்டல் மாற்றத்தினை ஏற்படுத்தத் தொழிற்சங்கங்கள் எப்படி ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கலாம்?

  7. டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் கொள்கைகள் பொதுத்துறைகளுக்குச் சாதகமாகவும், வளர்ச்சியை நோக்கிய நிர்வாகத்தினை வளர்ப்பதற்கும் அவசியமான அழுத்தத்தினை முன்னின்று தொழிற்சங்கங்கள் அளிக்க என்ன செய்ய வேண்டும்? மேலும், பொதுத்துறை சேவைகள் மற்றும் தொழிலாளர்கள் மீது எதிர்மறையான தாக்கம் ஏற்படுவதைத் தடுக்கவும், அவற்றைக் கண்டறியவும் தொழிற்சங்கங்கள் எத்தகைய கூட்டணிகளை உருவாக்கவும்/பங்கேற்கவும் வேண்டும்?

டிஜிட்டல் உரிமைகள் ஒருங்கமைப்பாளராக இத்திட்டத்தில் இணையவும்!

இந்த பயிற்சியில் தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பங்கேற்கவேண்டுமென்று நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.

இதன் பொருள் என்ன? இதில் நான் எப்படிப் பங்குவகிப்பது?

நோக்கங்கள்


ஒவ்வொரு பகுதியிலும் மூன்று தனித்துவமான குழுக்களுக்குப் பயிற்சி வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்:

  • டிஜிட்டல் உரிமைகள் ஒருங்கமைப்பாளர்களின் (டி.ஆர்.ஓ) சுயச் சார்புடைய பிராந்திய கூட்டமைப்புகள்

    இந்த டி.ஆர்.ஓ-க்களில் முக்கிய கூட்டணி அமைப்புகள் மற்றும் பி.எஸ்.ஐ-யின் தலைமை அலுவலக பிரதிநிதிகள் & பிராந்தியா ஊழியர்கள் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள். சிறப்பான செயல்பாட்டிற்கான தொழிற்சங்க மையங்களை (மெய் நிகர்) உருவாக்கும் முன்னோடிகளாகத் திகழ அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும். தற்போது நடைபெற்று வரும் திறன் மேம்பாடு பயிற்சிகள், நல்ல நடைமுறைகளைப் பகிரும் முன்னெடுப்புகள், புதிய தகவல்கள் வழங்கும் ஆவணங்களை உருவாக்குதல் மற்றும் அவர்களின் டிஜிட்டல் மாற்றங்களில் தொழிற்சங்கங்களின் ஆதரவினை பெறுதல் - ஆகியவற்றில் பிராந்திய துணை நிறுவனங்களுக்கு இந்த மையங்கள் ஆதாரங்களாகச் செயல்படும். ஒவ்வொரு பிராந்தியப் பயிற்சியையும் தயார் செய்து, பின்தொடர்வதில் DROக்கள் முக்கிய பங்காற்றுவார்கள். அவர்கள் திட்டம் முழுவதிலும், திட்டத் தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து மேற்கூறிய பணிகளை செய்வார்கள்.

  • ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள தொழிற்சங்கத் தலைவர்கள்

    இந்த அறிவுசார் மாற்றத்தினை முன்னின்று வழிநடத்த வேண்டியவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களே ஆவார்கள். அர்ப்பணிப்பு உணர்வுடனும், முழு கவனத்துடனும் தொழிற்சங்க தலைவர்களுக்குப் பயிற்சி அளிக்காவிட்டால் - தொழிற்சங்கங்கள், தொழிற்கூட பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க செயலகப் பணியாளர்கள் ஆகியோரது திறன்களை மேம்படுத்துவதும், கவனத்தை ஈர்ப்பதும் சாத்தியமில்லை. ஒரு ஒருங்கிணைந்த அடிப்படை அறிவை உருவாக்குவதே இந்த பயிற்சி தொகுப்புகளின் நோக்கமாகும். வலிமையான தொழிலாளர்களின் தரவு உரிமைகளுக்காகவும், அல்காரித அமைப்புகளை இணை-நிர்வாகம் செய்வதற்காகவும் பேரம் பேசவும் இத்தொகுப்பு உதவும். மேலும், அவர்களின் டிஜிட்டல் மற்றும் அறிவுசார் மாற்றத்திற்கு உதவும் கருவிகளைத் தொழிற்சங்க தலைவர்களுக்கு வழங்கவும் இத்தொகுப்புகள் உதவியாக இருக்கும்.

  • தொழிற்கூட பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க செயலக பணியாளர்கள்

    பணியிடத்தில் எந்தவொரு டிஜிட்டல் மாற்றமும் வெற்றிகரமாக நிகழத் தொழிற்கூட பிரதிநிதிகள் மிகவும் அவசியமாவார்கள். அவர்கள் நடைமுறைகளுக்கு அருகாமையில் இருப்பவர்கள் மட்டுமில்லை, மேம்பாடுகள் மீதான கவனத்தினை ஈர்க்கவும் அவர்கள் உதவுவார்கள். பிரச்சினைகளை முன்வைக்கவும், நிர்வாகத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அதனை நிவர்த்தி செய்வதும் தொழிற்கூட பிரதிநிதிகளே ஆவார்கள். தொழிற்கூட பிரதிநிதிகளின் பணிகளில் உதவி, அறிவுரை வழங்க வேண்டியது தொழிற்சங்க ஊழியர்களின் இன்றியமையாத கடமையாகும். இந்த இரண்டு முக்கிய குழுக்களின் மீது கவனம் செலுத்தி, அவர்கள் இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைக்கச் செய்வதும், ஒவ்வொரு பிராந்தியத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைப்பதுமே இந்த பயிற்சி வகுப்புகளின் நோக்கமாகும். தொழிற்கூட பிரதிநிதிகளுக்கான விரிவான திட்டம் ஒன்றை வழங்குவது இந்த முன்மொழிவின் நோக்கமல்ல – அது கூட்டணியில் உள்ள தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும். இருப்பினும், தொழிற்கூட பிரதிநிதிகளில் மாற்றங்களை ஏற்க முன்வருபவர்களுக்குப் பயிற்சி அளிப்பது என்பது - டி.ஆர்.ஓ-க்கள், தலைமை அதிகாரிகள் மற்றும் செயலக ஊழியர்கள் ஒரு விரிவான ஆரம்பத்தினை வழங்கத் தேவையான அடித்தளத்தை அமைக்க உதவியாக இருக்கும்.

வடிவமைப்பு

டி.ஆர்.ஓ.-க்களுக்கு 3 x 3 மணிநேர பயிற்சி அளிக்கப்படும்.

தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் ஊழியர் பிரதிநிதி குழுக்கள் ஆகியோருக்கு தலா 2 x 3 மணிநேர பயிற்சி வழங்கப்படும்.

ஒவ்வொரு பயிற்சி சுற்றிலும் கலந்துரையாடலுடன் கூடிய பயிற்சி வகுப்புகள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் இருக்கும். அந்தந்த பங்கேற்பாளர்கள் தங்கள் குழுவில் உள்ள அனைத்து பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்வதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

பயிற்சித் தொகுப்புகளோடு சேர்த்து, ஒவ்வொரு பிராந்தியம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் உதவும் வகையில் எழுத்துப் பூர்வமான மற்றும் ஒலி-ஒளி வடிவலானப் பின்புல தகவல்கள் வழங்கப்படும். பயிற்சி வகுப்புகளின் ஒளிப்பதிவுகள் வழங்கப்படும், அவற்றைக்கொண்டு பங்கேற்பாளர்கள் தங்கள் சக ஊழியர்களுக்கு மேலும் பயிற்சி அளிக்கலாம்.

கூட்டுப் பேரம் பேசுவதற்கான தொகுப்புக் கட்டுரைகளை உருவாக்குவது மற்றும் பணியிடங்களில் அல்காரிதம் அமைப்புகளின் இணை-நிர்வாகத்திற்கான மாதிரிகளை உருவாக்குவது உள்ளிட்ட பி.எஸ்.ஐ-யின் பணிகளை மேம்படுத்துவதில் டி.ஆர்.ஓ-க்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கால வரம்பு


டிஜிட்டல் உரிமைகள் அமைப்பாளர்களுக்கான பயிற்சியுடன் திட்டம் தொடங்கும். அவை நிபுணத்துவத்தினை வழங்கும் பிராந்திய மையங்களாகச் செயல்படும். மேலும், அவ்வாறு செயல்படுகையில் தொழிற்சங்கங்களுக்குத் தேவையான ஆதரவையும் வழங்கும்.

பின்னர் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தொழிற்சங்க தலைவர்களின் பயிற்சி துவங்கும். இதன் காரணமாக, திட்டத்தில் ஈடுபட்டுள்ள பி.எஸ்.ஐ. கூட்டமைப்பில் உள்ள அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் அப்போது தேவையான வேகத்திற்கு ஈடுகொடுக்கத் தயார் நிலையில் இருப்பார்கள்.

பி.எஸ்.ஐ. யின் தொழிற்சங்க தலைவர்கள் முன்னின்று நடத்தாமல் எந்தவொரு டிஜிட்டல் மாற்றமும் சாத்தியமாகாது.

பின்னர் 2022-ன் பிற்பகுதியிலும், 2023-ன் முற்பகுதியிலும் பணியிட பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்தத் தொழிலாளர்களின் 3-வது குழுவிற்குப் பயிற்சி அளிக்கப்படும். அதாவது, ஊழியர் பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் தொழிற்சங்க ஊழியர்கள் அக்குழுவில் இருப்பார்கள்.

முக்கிய பிரசுரங்கள்