கோவிட்-19 நெருக்கடி- பன்னாட்டுப் பொதுப் பணிகளது முன்னுரிமைகளும் எண்ணங்களும்

நாம் வாழும் தருணத்திற்கு முழு தொழிற்சங்க இயக்கமும் இரண்டு முனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பி.எஸ்.ஐ உணர்கிறது: உடனடி இலக்கு அவசர நடவடிக்கைகளின் தொகுப்பு மற்றும் பொருளாதார பதில் (ஒவ்வொன்றும் 8 புள்ளிகளைக் கொண்டது)

பன்னாட்டுப் பொதுப் பணிகள் தனது உறுப்பினர்களுள் இதுவரை எதிர்கொள்ளாத கடுமையான நெருக்கடியைச் சந்திக்கிறது. சுகாதாரப் பணியாளர்கள், உலகளவில், பாதிக்கப்பட்ட மக்கள் தொகையில் 12% . ஆனால் இறப்போர் எண்ணிக்கை தாங்க முடியாதது.

குறைந்த எண்ணிக்கை ஊழியர்களுள் கடுமையான பணிநேரம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகள் (PPE) உள்ளிட்ட, தயாராகாத நிலையில் உள்ள சுகாதார அமைப்பு, சுகாதாரப் பணியாளர்கள் இறப்பை விளைவிக்கும் அபாயங்கள் – இவை எல்லாம் சுகாதார அமைப்பு மேற்கொள்ளும் நெருக்கடி கால எதிர்த்தாக்குதலைக் குறைத்து மதிப்பிடுகிறது.

வென்டிலேட்டர், இ.சி.யு படுக்கைகள், புதிய வடிவ படுக்கைகள், சோதனை கருவிகள், சோதனைச்சாலைகள், மற்றும் உயிரியல் வல்லுநர்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் பற்றாக்குறை போன்றவை உயிரைக் காப்பாற்றுவதில் தடையாக அமைந்துள்ளன மற்றும் சுகாதாரப் பணி நிலைமையைச் சீரழிக்கும்.

(சில) அரசுகள், தனியார் மருத்துவமனைகளைப் பொது மருத்துவத் துறையில் இணைத்து நெருக்கடியை எதிர்கொள்ள வலியுறுத்தும் வரை மருத்துவத் துறையைத் தனியார் மயமாக்கிப் பல ஆண்டுகள் ஆகிய நிலையில் பொதுச் சுகாதார அமைப்பு சுமைக்குள்ளாகின.

ரோசா பாவனெல்லி பி.எஸ்.ஐ பொதுச் செயலாளர்

பன்னாட்டுப் பொதுப் பணிகள் தனது உறுப்பினர்களுள் இதுவரை எதிர்கொள்ளாத கடுமையான நெருக்கடியைச் சந்திக்கிறது.

இந்நிலையில், தொழிற்சங்க இயக்கம் ஆனது, உடனடி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும்.

 1. அதிக நோய்த் தொற்று ஆபத்துள்ள பணியாளர்கள் (சுகாதாரம், முதியோர் நலம், வீட்டு நலம், போக்குவரவு, மருத்துவ ஊர்திகள், காவல்துறை, தீயணைப்பு, சிறைகள் மற்றும் கைதானவர் பகுதிகள், அகதிகள், புலம்பெயர்ந்தோர் முகாம்கள், கடை ஊழியர்கள் மற்றும் காசாளர்கள், அத்தியாவசியப் பொருள் உற்பத்தியாளர்கள்) அனைவருக்கும் தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகள் (PPE) தர வேண்டும். இதைச் சாதிக்க, தொழிற் சங்கங்கள், இப்பொருள்களைத் தயாரிக்கும்படி உள்ளூர்த் தொழிற் சாலைகளை அரசுகளை வலியுறுத்த வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் திறமையாகச் செயல்பட, வென்டிலேட்டர்கள், சோதனைக் கருவிகள் மற்றும் பிற கருவிகள் மற்றும் உபகரணங்கள் எனத் தேவைகளை அணுக வேண்டும்.

 2. ஐசியு படுக்கைகளை அதிகரிக்க: தனியார் மருத்துவமனைகளை கைப்பற்றி மக்களின் தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்க அரசைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

 3. தற்போது உள்ள மருத்துவப் பணியாளர்களது சுமை மற்றும் தொற்று அபாயத்தைப் போக்க, செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களைப் பணி அமர்த்துவதுடன் பயிற்சி மற்றும் கருவிகளைத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 4. கோவிட்-19ஐக் குணமாக்கும் மருத்துவத்தின் காப்புரிமைகளை நீக்கிடுவோம். உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் உலகளவில், வணிக ரீதியான வன்பயன்பாட்டைத் தவிர்க்கவும் ஒரு தடுப்பூசி கண்டிடவும் கட்டமைப்பு/ முகமை உருவாக்குக.

 5. அத்தியாவசியம் அல்லாதவை, வணிக ரீதியானவற்றைத் தயாரிக்கத் தடை செய்க.

 6. தொழிலாளர்கள் மற்றும் குடும்ப வருமானம்- முறை செய்யப்படாத எல்லா வகைத் தொழிலாளர் உட்பட- சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அனைத்து அரசுகளும் ஆதரிக்க வேண்டும். பணிபுரிவதைத் தொடரும் பணியாளர்கள் அனைவருக்கும் அது போலவே குழந்தைகள் நலனுக்கு ஆதரவு தர வேண்டும். பன்னாட்டுப் பொதுப் பணிகளது நம்பிக்கை என்ன எனில் மாநிலங்களுக் கிடையே ஒட்டுமொத்தப் பொறுப்புடன், உலகளாவிய நெருக்கடியை எதிர் கொள்ள, குடும்ப மற்றும் சிறு வணிக வருமானத்திற்கு வளங்களைத் தருவதில் ஆதரவாக இருப்பதுடன் தனியார் துறையும் அவ்வாறே அரசுகளின் வழிகாட்டலுக்குப் பங்களிக்க வேண்டும்.

 7. தூய நீர் மற்றும் கைகழுவ சோப் கொடுப்பது உட்பட அரசின் முன்னேற்ற முகமைகளுடன் கூடியும் ஐஎஃப்ஐ (IFI)- கள் எந்த நிபந்தனையும் இன்றி போதுமான வளங்களைச் செலுத்தவும் வளரும் நாடுகளின் நெருக்கடியைக் கையாளவேண்டும்.

 8. பன்னாட்டுச் சமூகத்தை, உடனடியான, உரிமை அடிப்படையில் எல்லோருக்கும் ஆன தீர்வுகள், தடை செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர், எல்லையில் நிறுத்தப்பட்டோர், அகதிகள், புகலிடம் கோருவோர், புலம்பெயர்ந்தோர் மற்றும் முகாம்களில் மாற்றிடம் தரப் பட்டோர் என அனைவர்க்கும் தர வலியுறுத்த வேண்டும். மனித உரிமைகள் மற்றும் மனிதச் சூழல்மட்டுமல்லாது, தொழிற் சங்கங்கள் என அக்கறைகொண்டு, தடை செய்யப்பட்ட பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிவது, போதுமான மருத்துவம், தூய நீர் மற்றும் சுகாதாரம் கிடைக்காவிட்டால், கற்பனைக்கு அப்பாற்பட்ட பொது நலத்திற்குத் தீங்கு நேரிடும்.

உடல்நலக் குறைவால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவால் வரும் சிக்கல்களைக் கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த முப்பது ஆண்டுகளில் முன்னெச்சரிக்கையுடன் தயாராகாததும் உலகளாவிய பொருளாதார அமைப்பின் மாற்றங்கள் நிலைமையை மோசமாக்கியுள்ளது. இப்போதைய ஆழ்ந்த பொருளாதார அதிர்ச்சி, தொழிலாளர்களுக்குப் பெரிதும் கடினமாக்கி மீண்டும் வறுமை சுழற்சியைத் தரும். இப்போது பொருளாதார எதிர்வினையை அமைக்கும் கட்டாயத்தில் உள்ளோம்.

உலகளாவிய நெருக்கடி நிலையில்தான் இப்போது நிதி தருதல், உடனடி அதிரடி நடவடிக்கைகள் மூலம் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய முடக்கும் வறுமையை, சமூகத் தட மாற்றத்தை மற்றும் வலதுசாரி அரசியல் தீவிரத்தைத் தவிர்க்க வேண்டும். தொழிலாளர்கள் ஏற்கெனவே தியாகங்கள் செய்து வருகையில் சிறு வணிகங்கள் கஷ்டப்படுகின்றன. அமைப்பின் மூலம் லாபம் பெற்றவர்கள் திருப்பித் தருவதற்கும் அவர்கள் உருவாக்கிய குழப்பத்தைத் தீர்ப்பதில் பங்கேற்கவும் இதுவே சமயம். சிக்கல்கள் பின்வருவன:

 1. பெரிதும் பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரங்களுக்கு கடன் நிவாரண மற்றும் கடன் மறு கட்டமைப்பு அறிமுகம் செய்வதால் அவர்களது பணம், கடன் திருப்பும் நெருக்கடியைத் தவிர்ப்பதோடு உடல்நலம் மற்றும் பொருளாதார நெருக்கடியை அணுகலாம்.

 2. உலகளாவிய கடன் பிணையெடுப்பு அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதால் ஒழுங்கான கடன் மறுகட்டமைப்பு ஏற்படக்கூடும். தேவைப்பட்டால், அது கடன் தந்தவர் மற்றும் பெற்றவர் இடையேயான சுமையைப் பங்கிடும். மேலும் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிடவோ சமூக நெருக்கடியைச் சிக்கலாக்கவோ செய்யாது.

 3. ,ஐரோப்பா மற்றும் பிரேசிலில் உள்ளதுபோல் சட்டரீதியான கடன் மற்றும் செலவு வரையறையை நீக்கவும்.

 4. உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்பு, வட்டார வளர்ச்சி வங்கிகள் மற்றும் கடன் கொடுக்கும் தனியார் போன்றவற்றிலிருந்து) நாடுகளுக்கு கடன்களை வழங்குகையில் தொழிலாளர் சந்தைக் கட்டவிழ்ப்பு, தனியார் மயமாக்கல் அல்லது பெரும் செல்வர்களுக்கு வரிவிடுமுறை போன்றவற்றை தளர்க்காமல் காக்கவும்.

 5. இப்போதைய நெருக்கடிக்குக் காரணமான சொத்து குவிப்போரிடமிருந்து செல்வ வரியை விதிக்கவும்.

 6. 5%க்கு அதிகமாக லாபம் ஈட்டுவோரிடமிருந்து குழும வரியை 50% என உயர்த்துக. தொழிற்சாலைகள் தோல்வி அடைகையில், பொதுப் பணிக்கு நிதிப் பற்றாக்குறை, தொழிலாளர்கள் தியாகம் செய்தல் போன்ற காலத்தில் அதிக லாபம் ஈட்டும் தொழிற்சாலைகள் மீட்டெடுப்பில் தார்மீக மற்றும் பொருளாதாரக் கடப்பாடுடையவை. மற்ற வரி, தீர்வைகள் போல் அல்லாமல் அதிக லாபம் மீதான வரியானது சிக்கலில் உள்ள தொழிலை மேலும் சிரமப்படுத்தாது. ஏனெனில் ஏற்கெனவே பெற்ற அதிகப்படியான லாபத்தின் மீதுதான் வரியே தவிர சிக்கலில் உள்ள தொழிற்சாலைமீது மேலும் வரி இல்லை. அதிகப்படியான லாபம் நிதிதூண்டலுக்கு திருப்பிவிட உறுதி செய்வதன் மூலம் சிக்கலில் உள்ள தொழிற்சாலை பயன் பெறும்.

 7. புதிதாக இணைய சேவை வரியை உடனடியாக அறிமுகம் செய்து, பெரும் லாபம் ஈட்டி முன்னர் வரியைத் தவிர்த்தும் குறைந்த வரி மூலமும் பெரும் லாபம் ஈட்டிய குழுமங்கள் (நெட் ஃப்ளிக்ஸ், அமேசான் முதலிய) உடனடியாக தம் முறையான பங்கை கட்டலாம். பல நாடுகள் இத்தகைய வரியை விதிக்க எண்ணினாலும் ஓயிசிடி (OECD) பிஇபிஎஸ் (BEPS) செயல்முறை விளைவுகள் வெளிவரக் காத்திருக்கின்றன. இப்போது பிஇபிஎஸ் செய்முறை நம்பத் தகுந்த திட்டத்தைத் தர முடியாததால், உறுதியாக அவசர நிதிச் சமாளிப்புக்காக கால வரையறைக்குள் முடியாது. எல்லா நாடுகளுக்கும் உடனடியாக அறிமுகம் செய்து வரி விதிப்பு, ஆயுதமாக்க வலியுறுத்த வேண்டும்.

 8. நாட்டுக்கு நாடு பொது அறிக்கைகள் தராத மற்றும் வரிவிலக்கு நாடுகளில் இயங்கும் குழுமங்களுக்குப் பொருளாதாரப் பிணையெடுப்பு வழங்கப்படல் கூடாது. இந்நடவடிக்கை இல்லை எனில், அமெரிக்காவில் உலகளாவிய நிதி நெருக்கடிக்கு ஏற்பட்ட விளைவாலும், வரி விலக்காலும் பெற்ற பயன்கள் பங்குதாரர்கள், இயக்குநர்கள் மற்றும் நிர்வாகத்திற்குத் திருப்பி விடப்படுமேயன்றி வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்களது நிலைமையைக் காக்கப்பயன்படுத்தாது என்று காட்டுகிறது.

நெருக்கடியால் வீழ்ச்சி அடைந்த உற்பத்தி அமைப்புகள் மற்றும் உலகளாவிய விநியோகத் தொடர் உட்பட உலகளாவிய பொருளாதார அமைப்புபற்றி நாளடைவில் சிந்திக்கும் தேவை ஏற்படும். பொதுநலன் மற்றும் நல வாழ்வுக்கு தேவையான முக்கியமான உள்நாட்டுப் பொருள் உற்பத்தியின் தேவை போன்ற தொழிற் கொள்கைகளில் அரசின் பங்களிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொதுப் பணிகள் பங்களிப்பை மறுபரிசீலனை செய்வது மற்றும் பொது மருத்துவத் துறை, பொதுக் கல்வி, தூய நீர், தூய்மை, சமூகப் பாதுகாப்பு போன்றவற்றில் முதலீடு செய்தல் மிக அவசியம். அதாவது, இப்போதைய நிதி ஆளும் அமைப்பு மற்றும் பன்னாட்டுக் குழுமங்களின் ஆதிக்கம் முதலியன முடிவுக்கு வரவேண்டும் என்ற கூற்றை ஆதரிப்பதாகும்

எனவேதான், நாங்கள் இப்போதே நடைமுறையை மாற்ற வேண்டும் என்று நம்புகிறோம்.

எனவேதான், நாங்கள் இப்போதே நடைமுறையை மாற்ற வேண்டும் என்று நம்புகிறோம்.

உயிர்காக்கும் மருத்துவப் பணியாளர்களைக் கதாநாயகர்கள் எனக் கூறும்படி கேட்கவில்லை. அவர்கள் கதாநாயகர்கள் அல்லர்! அவர்கள் தொழில்முறையாளர்கள் - மரியாதை, மதிப்பு, பாதுகாப்புக்கான உரிமைகள், மற்றும் கெளரவமான ஊதியம் வழியான அங்கீகாரம் மற்றும் தொழில்புரியும் நிலைமையைக் காக்கக் கோருபவர்கள்.

நாங்கள் தெளிவுபடுத்த விரும்புவதெல்லாம் யார் லாபம் அடைந்தார்கள் எனவும், எதிர்காலத்தில் பேராபத்தைத் தவிர்க்கவும், நன்மைக்காக உண்மையில் உழைக்கும் அனைவருக்கும் முறையாகச் செய்யவும் சட்டங்கள் எப்படி மாற்றப்படவேண்டும் என்பதே.

இப்போதைய நிலையில், இதை உணராமை என்பது தவறு மட்டும் அல்ல, பொறுப்பின்மையும் கூட. ஏற்கெனவே ஒருமுறை 2008ஆம் ஆண்டு இழந்துவிட்டோம். இம்முறை இழக்க முடியாது.

போப் ஃபிரான்சிஸ் சொன்னது போல், "சரியாக இல்லாத உலகில் பாதுகாப்பாக இருப்போம் என்று நினைத்தோம்". கோவிட்-19 உருவாக்கிய உலக நெருக்கடி காட்டுவது என்ன எனில் நோய்பிடித்த பூமியில் நாம் பாதுகாப்பாக இல்லை, பாதுகாப்பாக இருக்கவும் மாட்டோம் என்பதே.

பருவ கால நெருக்கடியை எதிர்கொள்ள இப்போது அரசு எடுக்கத் தொடங்கியுள்ள கொள்கைகளை நாம் செயலாக்க வேண்டும் - வேலைவாய்ப்பு மற்றும் பன்னாட்டுக் குழும மாறுதல்கள் எனும் குறுகிய நோக்கு மனித இனத்தை நெருக்கடியில் கொண்டு விடுவதுடன், அமைப்பே தோல்வியுறவும் செய்யும்.

கொள்கையில் செய்யும் உடனடி மாற்றங்கள் நடைமுறைப்படுத்த இயலாதவை என்றோ சந்தைகள் வழியாக எதிர் கால நெருக்கடியைச் சந்திப்போம் என்றோ எவரும் கூற முடியாது. ஆனால், மக்கள் எச்சரிக்கையை ஒதுக்கிவிட்டு பழையபடி நடந்துகொள்ளத் தொடங்கிடுவர். நம் கடமை என்ன எனில் அவ்வாறு நடக்காதபடி பார்த்துக் கொள்வது. இப்போதைய சிரமங்கள் வீண் போகாது எனும் எச்சரிக்கைமூலம் மக்களுக்கு உணர்த்தி, அதிரடியான புதுப்பொருளாதாரத்தைக் கட்டமைப்புதுடன், லாபத்தைவிட மக்களும் பூமியும் முக்கியம் எனும் கொள்கைகளை வகுப்போம் என்று உறுதி கொள்வோம்.