புதிய விளக்கக் கட்டுரைத் தொடர்: நிறுவன வரியை சீரமைக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் எப்படி வெற்றி பெறலாம் என்பதைப் பற்றி காண்போம்
சர்வதேச நிறுவன வரிகளுக்கான விதிகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதற்கும், வரிவிலக்கு உள்ள அந்நிய நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள $30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை தரமான பொது சேவைகளுக்கு நிதியாக பயன்படுத்துவதற்கும், நீண்டகாலமாக வாதிட்டு வரும் ஒரு அமைப்பாக பி.எஸ்.ஐ (PSI) செயல்பட்டு வருகிறது. கோவிட் (COVID) காலகட்டத்தில் இதனை துரிதமாக நிறைவேற்ற வேண்டியது அவசியமாகிறது.
Daniel Bertossa
தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள், ஒரு நியாயமான வரி அமைப்பை பெறுவதற்கு தேவையான அனைத்து உண்மை விவரங்கள் மற்றும் வாதங்களைக் கொண்ட இந்த விளக்கக்கட்டுரைத் தொடரை நாங்கள் எட்டு பகுதிகளாக உருவாக்கியுள்ளோம். ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இந்தோனிசியன், கொரியன் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இந்த விளக்கக் கட்டுரைகள் உள்ளன.
அனைத்து விளக்கக் கட்டுரைகளையும் பதிவிறக்கம் செய்ய
இங்கே கிளிக் செய்யவும்முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது வரி என்பது மிக அவசியமான ஒன்றாகிறது
முன் களப்பணியாளர்கள் கோவிட்-19 (COVID-19) நோயை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் இந்த சூழலில், பெருந்தொற்று நோயினால் ஏற்பட்டுள்ள பொருளாதார செலவுகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. அரசுகள் வருமான இழப்பை சந்தித்து வருகின்றன. மேலும், பல ஆண்டுகளாக போதிய நிதி கிடைக்கப்பெறாத சமூக பாதுகாப்பமைப்புகள் மற்றும் சுகாதார அமைப்புகளுக்காக அரசுகள் மேற்கொள்ளும் செலவுகளும் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளன. வரி செலுத்துவதை தவிர்ப்பதால் அடிக்கடி இது போன்ற சூழல் ஏற்படுகின்றது.
உலக அளவிலான நிதி நெருக்கடியினைத் தொடர்ந்து 2007 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் உலகளாவிய வரி வருமானம் 11.5% இழப்பினை சந்தித்தது. கோவிட் (COVID) தாக்கத்தினால் ஏற்பட்ட மந்தநிலையானது பொது பட்ஜெட்களில் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியது. இதன் காரணத்தால் உலகளாவிய வரி வருமானம் மேலும் வீழ்ச்சியினை சந்திக்கக்கூடும்.
செயல்பாடுகளை முடக்கும் சிக்கன நடவடிக்கைகளை தவிர்க்க பொதுக்கடன் அமைப்புகளை கணிசமாக மறுசீரமைப்பது அவசியமாகிறது (கடன் மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான எங்களது புதிய தொடரை இங்கு காண்க). மேலும், அதிக அளவில் சொத்துக்களை சேர்த்து குவித்தவர்கள், தங்களது நியாமான பங்களிப்பை வழங்குவதை உறுதிசெய்யும் புதிய வழிகளைக் கண்டறிவதும் அவசியமாகும்.
சொத்திற்கு வரி விதிக்க வேண்டும், வரி செலுத்துவதில் கீழ்நிலையிலேயே இருக்க போட்டியிடுவதை நாம் நிறுத்த வேண்டும்; நிறுவன வரி செலுத்துவதை தவிர்க்கும் செயல்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்பதற்காக பி.எஸ்.ஐ (PSI) தொடர்ந்து வாதிட்டு வந்துள்ளது.
ஆனால், அதிக வசதி படைத்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள் வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்பதை நம்மால் தடுக்க இயலாது என்றே தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் பெரும்பாலும் கூறப்படுகிறது. அவர்களின் பின்னணியில் உள்ள கணக்கீட்டு நிறுவனங்கள், வழக்கறிஞர்கள், அதிகாரத் தரகர்கள் ஆகியோர் பெருமளவிலான பணத்தினை செலவிட்டு, ‘நிறுவனங்கள் இவ்வாறாக வரி ஏய்ப்பு ஊழல் செய்தது’ என்று நாம் விவாத அளவில் பேசுவதைக்கூட தடுத்து நிறுத்திவிடுவார்கள். இருப்பினும், தொடர்ச்சியாக உண்மைகள் அம்பலமானதை அடுத்து, இதுபோன்ற துஷ்பிரயோகம் மீதான பொது மக்களின் கோபம் அதிகரித்து வருகிறது.
சர்வதேச நிறுவன வரிவிதிப்பு சீர்திருத்தத்திற்கான சுயாதீன ஆணையத்தின் (Independent Commission for the Reform of International Corporate Taxation) ஆணையர்களுள் ஒருவரான, வரி வல்லுநர் கேப்ரியல் ஜூக்மேன் (Gabriel Zucman) அவர்களின் கணிப்பின் படி வரி செலுத்துவதை தவிர்ப்பதால், நியாமாக கிடைக்கவேண்டிய உலகளாவிய வெளிநாட்டு லாபத்தில் 40% தொகை வரிவிலக்கு உள்ள நாடுகளுக்கு சென்றுவிடுகிறது. (குறித்த எங்களது கட்டுரையை காண்க).
நிறுவன வரிகள் மூலமாக ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு (EU) வர வேண்டிய தொகையான சுமார் 25 பில்லியன் யூரோக்களை, அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏய்ப்பு செய்கின்றன. உங்களது நாடு எவ்வளவு லாபம் மற்றும் வரி வருமானத்தினை இழக்கிறது (அல்லது ஈர்க்கிறது) என்பது குறித்த வரி தகவல்கள் அடங்கிய ஒரு புதிய வரைபடத்தை நீங்கள் இங்கு காணலாம்.
விளக்கக் கட்டுரைகளைக் காண்க
பி.எஸ்.ஐ-யின் (PSI) விளக்கக் கட்டுரைகளின் படி, இதற்கு தீர்வுகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை எதிர்த்து நிற்பதற்கும், அவர்களை தங்களது நியாயமான வரி பங்களிப்பினை செலுத்த வைப்பதற்கும் தேவைப்படுவது அரசியல் தீர்வாகும். இந்த இலக்கினை எட்டுவதில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அனைத்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களும் இந்த பிரச்சனைகளை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், தினமும் பெரிய அளவில் நிகழும் நிறுவன வரித் திருட்டு சம்பவங்களை வெளிப்படுத்த அவர்கள் பயப்படக்கூடாது.
சர்வதேச பண நிதியத்தின் (International Monetary Fund) நிதி விவகாரத் துறையின் (Fiscal Affairs Department) கணிப்பின்படி, லாபத்தினை குறைந்த வரி விகிதம் உள்ள இடங்களுக்கு மாற்றுவதால் ஆண்டுக்கு $500 பில்லியன் டாலருக்கு மேல் நிறுவன வரி இழப்பு ஏற்படுகிறது; பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பில் (OECD) உள்ள நாடுகளுக்கு ஆண்டுக்கு $400 பில்லியன் டாலரும், வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு சுமார் $200 பில்லியன் டாலரும் இழப்பு ஏற்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு சட்டவிரோத நிதி கையாளுதல் காரணமாக ஆண்டுக்கு சுமார் $89 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது; இது அக்கண்டத்தின் ஜிடிபி-யில் (GDP) 3,7% ஆகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு புதிய ஆய்வின் படி, இந்தத் தொகையானது ஆப்பிரிக்க நாடுகள் பெறும் வளர்ச்சி நிதியைக் காட்டிலும் அதிகமானது என்பது தெரியவருகிறது.
இதன் காரணமாகவே பி.எஸ்.ஐ (PSI) மற்றும் சிஐசிடிஏஆர் (CICTAR) போன்ற அமைப்புகள் - நமது பொருளாதாரத்தில் நிறுவன வரி ஏய்ப்பு எவ்வாறு பரவுகிறது என்பதை அம்பலப்படுத்தும் நோக்கில் அதற்குத் தேவையான அறிக்கைகளை தொடர்ந்து தயாரித்தும், ஊடகங்களை உருவாக்கியும் வருகின்றன. ஆனால், கோவிட் (COVID) நோய்க்கு எதிரான அவசரகால போராட்டம் மற்றும் பொதுத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய விலையேற்றம் ஆகிய காரணங்களினால், இது பெரும் மாற்றத்தினை கோருவதற்கான நேரமாகும்.
ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph Stiglitz)
பழைய வரிவிதிப்பு முறையானது இந்த நோக்கத்திற்கு உதவாது.
ஓஈசிடி (OECD) : முடக்க நிலை இருந்தால் & போதிய வளர்ச்சி இல்லையென்றால் அந்நாடுகள் உடனடியாக செயல்பட வேண்டும்
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், உலகளாவிய தொழில்நுட்ப பெருநிறுவனங்களுக்கு எப்படி வரி விதிப்பது என்பது குறித்து, ஏழு ஆண்டுகளைக் கடந்தும் அந்த அமைப்பால் ஒரு உடன்பாட்டை எட்ட முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. அந்நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் லாபத்தினை ஈட்டும் அதே தருணத்தில் மற்றவர்கள் கோவிட்-19 (COVID-19) பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நியாயமான, உலகளாவிய பொது நன்மையினைக் காட்டிலும், ‘ஒரு நாட்டின் நலனைப் பேணுவது என்பது பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாப்பதிலேயே உள்ளது’ என்ற தவறான புரிதல் உள்ளது. இதன் காரணத்தினால் ஓஈசிடி (OECD) அந்நாடுகளிடம் முன்வைத்த இலகுவான திட்டங்களில் கூட ஒரு உடன்பாட்டினை பெற முடியவில்லை. உலகளவில் குறைந்தபட்ச நிறுவன வரியாக 12.5% விதிக்க வேண்டும் என்ற ஒரு சாதாரண கோரிக்கை கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை: பி.எஸ்.ஐ (PSI) நீண்டகாலமாக 25% குறைந்தபட்ச வரியினைக் கோரிவருகிறது. இதன் விளைவாக சுகாதாரம், வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பொது செலவுகளுக்கு உதவும் நிதியாக இருக்கும் வரிகளை, பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஏய்த்து வருகின்றன.
உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார வல்லுநரும், ஐசிஆர்ஐசிடி-யின் (ICRICT) ஆணையருமான ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph Stiglitz) அவர்கள் கூறியதாவது:
“பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்புடைய நாடுகளின் குறிக்கோள்களை, ஓஈசிடி-யின் (OECD)-யின் முன்வைப்புகள் வெளிக்காட்டுகின்றன. பழைய வரிவிதிப்பு முறையானது இந்த நோக்கத்திற்கு உதவாது. விற்பனை, வேலைவாய்ப்பு மற்றும் மூலதன பங்கு ஆகியவற்றின் விகிதாசார அடிப்படையில் லாபத்தினை கணக்கிடும் ஒரு சூத்திர அடிப்படையிலான கொள்கைக்கு நாம் அவசியம் மாறவேண்டும்.”
பன்னாட்டு நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் உள்ள நிறுவனங்களாகக் கருதி வரி விதிக்கும் முறை பற்றிய எங்களது விளக்கக் கட்டுரையானது, அதன் விளக்கம் என்ன என்பதையும், தொழிலாளர்களுக்கான தாக்கம் மற்றும் அதனை எப்படி செயல்படுத்துவது ஆகியவை குறித்தும் எளிய மொழிநடையில் விவரிக்கிறது.
மாற்றத்திற்கான உடனடி தேவை
$30 டிரில்லியன் டாலர்கள்
வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது
$500 பில்லியன் டாலர்கள்
ஒவ்வொரு ஆண்டும் நிறுவன வரி ஏய்ப்பின் மூலம் ஏற்படும் இழப்பு
$73 பில்லியன் டாலர்கள்
உலகப் பெருந்தொற்று துவங்கியதிலிருந்து ஜெஃப் பெசாஸ் (Jeff Bezos) “சம்பாதித்த” தொகை
பருவநிலை மாற்றம் மற்றும் சுகாதார பெருந்தொற்று ஆகிய காரணங்களினால் வளரும் நாடுகள் சந்தித்துவரும் வாழ்வாதார அச்சுறுத்தல்கள் குறித்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முன்னாள் பொருளாதார பேராசிரியர் ஜெயதி கோஷ் (Jayati Ghosh) அவர்கள் தங்கள் அக்கறையை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது, “பொது சேவைகளுக்கான செலவுகளை இந்த நாடுகளில் உள்ள அரசுகளை அதிகரிக்க வைப்பதில் உலகளாவிய சமூக அமைப்புகள் தோல்வியுற்றன. பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது லாபத்தினை குறைந்த வரி சட்டமுள்ள உள்ள நாடுகளுக்கு மாற்றாமல், நியாயமான முறையில் தங்களது பங்கு வரிகளை செலுத்துவதை உறுதிப்படுத்தும் – குறைந்தபட்ச சர்வதேச வரி ஒத்துழைப்பு என்ற முன்வைப்பு தோல்வி அடைந்தது – இது சமீபத்தில் நடந்த - மிகப்பெரிய தோல்வியாகும். அரசுகள் தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.”
இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு நீண்டகால தீர்வு வேண்டுமெனில், நிறுவனங்களுக்கு அதன் உலக அளவிலான லாபத்தில் வரி விதிக்கும் வகையில், சர்வதேச வரி அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்; அதற்கான உலகளாவிய முயற்சிகளை தொழிற்சங்கங்கள் ஆதரிக்க வேண்டும். தற்காலிகமான தீர்வாக , குறைந்தபட்ச உலகளாவிய நிறுவன வரி விகிதத்திற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். மேலும், நமது அரசுகளை சொத்து வரி விதிக்க நாம் கோரிக்கை விடுக்க வேண்டும் மற்றும் டிஜிட்டல் பெருநிறுவனங்களுக்கு வரி விதிப்பதும் ஒரு சிறந்த வழியாகும். இதற்காக நாம் எப்படி போராடுவது, இதில் எப்படி வெல்வது என்பது குறித்த விவரங்களை எங்களது விளக்கக்கட்டுரைகள் வழங்கும்.
ஜெயதி கோஷ் (Jayati Ghosh)
“அரசுகள் தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்”.
“அரசுகள் தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்”.
டிஜிட்டல் பெருநிறுவனங்களுக்கு வரி விதிப்பது குறித்து அரசியல் அழுத்தம் பெருமளவில் தரப்பட்டு வருகின்றது, அந்நிறுவனங்களில் பெரும்பான்மையானவை வரியே செலுத்துவது கிடையாது, இருப்பினும் அவர்கள் இந்த பெருந்தொற்று காலத்தில் கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான ஜெஃப் பெசாஸ் (Jeff Bezos) வாகியுமா உலகின் மிகப்பெரிய செல்வந்தர் ஆவார், இவர் 2020-ல், இதுவரை தமது சொத்து மதிப்பில் கூடுதல் $73 பில்லியன் டாலர்களை சேர்த்துள்ளார்.
டிஜிட்டல் நிறுவன பெரும் பணக்காரர்கள் மீதுள்ள கோபம் சரியான முடிவினை தருவதை நாம் உறுதி செய்தல் வேண்டும். அதாவது இதன் மூலம், அவர்கள் நியாயமாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவதையும்; அந்த சீர்திருத்தங்கள் ஒரு ஒருமித்த மற்றும் நியாயமான உலகளாவிய நிறுவன வரி அமைப்பினை ஏற்படுத்துவதை சாத்தியப்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும். இதில் உள்ள ஆபத்து என்னவென்றால், டிஜிட்டல் பெருநிறுவனங்களின் செல்வாக்கிற்கு உட்பட்டு அரசுகள் டிஜிட்டல் விற்பனை வரியை விதிக்கக்கூடும்; அவை பிற்போக்கான நடவடிக்கையாகும். அவ்வரியானது நுகர்வோர் மீது சுமத்தப்படும். அதனால் அரசுக்கும் குறைந்த வருமானே கிடைக்கும். இதில் மேலும் மோசமான விஷயம் என்னவென்றால், அந்த நிறுவனங்கள் நியாயமாக தங்கள் பங்கு வரியை செலுத்துவது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும்; இதனால் நமக்குத் தேவையான உலகளாவிய தீர்விலிருந்து நாம் மேலும் விலக நேரிடும்.
பி.எஸ்.ஐ. (PSI) அமைப்பானது, சிஐசிடிஆர் (CICTAR) எனப்படும் சர்வதேச நிறுவன வரி பொறுப்பகம் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட்டு, டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வரி விதிப்பது பற்றிய ஒரு சிறப்பு கட்டுரைக் குறிப்பை உருவாக்கி வருகிறது. அது விரைவில் வெளியிடப்படும்.
அதே வேளையில், நீங்கள் இந்த விளக்கக் கட்டுரைத் தொடர் முழுவதையும் இங்கு பதிவிறக்கம் செய்யாலாம்.