இணையவழி கற்றலுக்கு உங்களை வரவேற்கிறோம் - சேவைகளை மீண்டும் அரசுமயமாக்குதல்

பொதுச் சேவைகளை மீண்டும் பொதுவுடைமையாக கொண்டு வருவதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ள ஆர்வமுள்ள தொழிற்சங்கவாதிகளின் தேவைக்கேற்ப கற்க உதவும் ஒரு வளமாக இந்த இணையவழி-வகுப்புகள் இருக்கும்.

இந்த பாடத்திட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளவை பின்வருமாறு :

1. பொதுச் சேவைகளை மீண்டும் அரசுமயமாக்க நாம் ஏன் அழைப்பு விடுக்கிறோம் ?

2. நமக்கு வரும் எதிர்ப்பை எவ்வாறு சமாளிப்பது ?

3. சட்ட அச்சுறுத்தல்களை எவ்வாறு கையாள்வது ?

4. பொதுச் சேவைகளை அரசின் பொதுத்துறைக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்கிற தொழிற்சங்க நோக்கத்தினை உருவாக்குதல்

5. தனியார்மயமாக்கலை அகற்றி அரசுமயமாக்கும் பிரச்சாரத்தை நிர்மாணிப்பது எப்படி ?

பாடத்தின் வரைவமைப்பு

இதன் முக்கிய கருப்பொருள் ஒவ்வொன்றும் மூன்று கற்றல் நிலைகளைச் சுற்றி முறையாக அமைக்கப்பட்டுள்ளன:

 நிலை 1: 5 நிமிடத்தில் பதிலளிக்கவும்
எங்களது சுருக்கமான விளக்க காணொளிகளை பாருங்கள்.

 நிலை 2: பாடத்தின் விவரங்கள்
இந்த தலைப்பில் இடம்பெற்றுள்ள எடுத்துக்காட்டுகள் குறித்த எங்கள் விளக்கப்படங்கள் மற்றும் அணுகக்கூடிய பாடங்களை பதிவிறக்கம் செய்யவும்

 நிலை 3: மேலும் தெரிந்துகொள்ளவும்
மீள் அரசுமயமாக்கல் குறித்த பாடங்கள் முழுவதும் ஆராய எங்களது தேடல் அம்சத்தை பயன்படுத்தவும்.

உங்கள் கேள்விகளுக்கு பதில்களைப் பெற உரிய ஆவணங்களைக் கண்டறிய இது உதவும்

பாடத்தின் கண்ணோட்டம்

பொதுச் சேவைகளை வழங்குவதில் தனியார் துறை தோல்வியடைந்ததற்கான உதாரணங்கள்

சமூக பேச்சுவார்த்தைக்கான உத்திகள் மற்றும் அரசுமயமாக்கலின் மாற்றத்தின் போது தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் குறித்த உதாரணங்கள்

தகவல்தொடர்பு உத்திகள் குறித்த எடுத்துக்காட்டுகள்